திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் மூலனூர் சுற்றியுள்ள பகுதிகளில் கேரளாவில் இருந்து அதிக அளவு லாட்டரி சீட்டுகள் வாங்கப்பட்டு தாராபுரம் குண்டடம் மூலனூர் பகுதிகளில் அதிக அளவு திருட்டு லாட்டரி சட்டவிரோத நபர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் தாராபுரம் பகுதிகளில் அதிக அளவு லாட்டரி புழக்கத்தில் உள்ளது. மேலும் ஒரு நம்பர் ஆன்லைன் லாட்டரி உள்ளிட்ட லாட்டரிகள் ரெகுலராக வாங்கும் நபர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனை அதிக அளவு நடைபெற்று வருகிறது. இதில் கூலித்தொழிலாளிகள் மற்றும் வருமானத்திற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடைவதுடன் மட்டுமல்லாமல் பேராசை மனிதர்களிடையே இந்த லாட்டரி தடை செய்தும் குண்டடம் பகுதிகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தந்ததுவின் பேரில் குண்டடம் பகுதியான வெள்ளம் பட்டியைச் சேர்ந்த மூர்த்தி வயது 56 தந்தை பெயர் சுப்பன் கிழக்குத் தோட்டம் பஸ் ஸ்டாப் அருகே காவல்துறை சோதனையின் போது சுமார் 300-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆயிரக்கணக்கான மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் எங்கிருந்து வாங்கினார் இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேலும் இதில் மறைமுகமாக விற்பனை செய்யும் சட்ட விரோத நபர்களை அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து இதில் பாதிக்கப்படும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கும் தாராபுரம் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்