ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்
போலி (போர்ஜரி) ஆவணங்கள் தயார் செய்து, சொத்து மற்றும் நிலங்களை அபகரிக்கும் செயல்கள் கீழக்கரையில் அரங்கேறி வரும் சதி செயல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத்தெருவில் வசித்து வருபவர்கள் செய்யது இப்ராகிம் மகன்கள் முகம்மது மன்சூரா, முகம்மது முனீரா.
இவர்களுக்கு சொந்தமாக ராமநாதபுரம் கோட்டம், கீழக்கரை வட்டம், காஞ்சிராங்குடி குரூப், பழைய புல எண் 440/2 மற்றும் 442/1ல் கட்டுப்பட்ட 75 செண்டு (மொத்தம் 1 ஏக்கர் 50 செண்டு) நிலம் உள்ளது. இந்த நிலம் கீழக்கரை சார்பதிவக செட்டில்மென்ட் ஆவண எண்கள். 2086/2006 மூலமும்,2087/2006 மூலமும் பதிவு செய்யப்பட்டு அன்றைய தேதியிலிருந்து இவர்கள் வசம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர்களது தாய்மாமன் அப்துல்லா சாஹிபு இந்த சொத்தினை அபகரிக்கும் நோக்கில் போர்ஜரியாக ஆவணங்கள் தயார் செய்து, பட்டா எண்கள். 10453 மற்றும் 10487 பெற்றுள்ளார், இதனையறிந்து, கீழக்கரை வட்டாட்சியரிடம் மனு செய்து, மேற்படி மனு விசாரணை செய்யப்பட்டு, மேற்படி போர்ஜரியாக பெறப்பட்ட பட்டாக்களை கடந்த 15.09.2025ம் தேதியன்று, மூ.மூ.அ4/3050/2025ன் கீழ் ரத்து செய்யப்பட்டு விட்டது.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முகம்மது பாரூக் என்பவர் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து, சட்டத்தை தன் கையில் எடுத்து, நீதித்துறையையும், காவல்துறையினரையும், அரசு துறைகளையும் தன் சட்டைப்பையிற்குள் வைத்து தர்மத்திற்கும் நியாயத்திற்கும் எதிரான செயல்களை தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளார் என இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை, முகம்மது பாரூக் தாவா பிரச்சனைக்குள்ளான இடத்தை அளப்பதற்கு அனுமதியளிக்காமல் தடுத்து எங்கள் உரிமையையும் நலனையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் ராமநாதபுரம மாவட்ட ஆட்சியர், மதுரை தென்மண்டல காவல் துறை தலைவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், கீழக்கரை வட்டாட்சியர், கீழக்கரை வட்ட நிலஅளவையர்ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர்.
கீழக்கரையில் அரங்கேறியுள்ள இந்த சதி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.