திருவாரூரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பேரணி

திருவாரூரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருத்துறைப்பூண்டி அண்ணா சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட துனைச்செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் முகமது அசாருதீன், மாவட்ட துனைத்தலைவர் அப்துர் ரஹ்மான்,மாவட்ட துனைச்செயலாளர் நைனா முகமது, மாவட்ட மருத்துவரணி அப்துல் ரஹ்மான், மாவட்ட தொண்டரனி ஹாஜா முகைதீன், மாவட்ட மாணவரனி ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது சித்தீக் ஆகியோர் கோசங்கள் எழுப்பினர்.
மாநில செயலாளர் முகமது ஒலி உரையாற்றினார்.

அவர் பேசுகையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் கடுமையாக வழங்க வேண்டும் எனவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முதல்வர் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை தொடர்ந்து பல்வேறு பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நிலை வருகிறது குறிப்பாக தமிழக அரசு சார்பில் புதிதாக துவங்கப்பட்ட சிங்கப்பெண் திட்டத்தில் உள்ள காவலர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்

இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதியாக மாவட்ட துனைச்செயலாளர் முஹம்மது ஜவாத் நன்றியுரை ஆற்றினார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy